The Discredited Prime Minister’s Unloved Visit to Tamil Nadu மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகை
KUDANKULAM ANTI-NUCLEAR SATYAGRAHA, INDIA, 5 Aug 2013
ஆகஸ்ட்/August 1, 2013
The People’s Movement Against Nuclear Energy (PMANE) would like to protest against the visit of the Indian Prime Minister to Tamil Nadu on August 2, 2013 to open a multi-crore power plant piping unit at BHEL at Thirumayam in Pudukottai district, Tamil Nadu. This is a desperate, last minute pre-election stunt to show that the UPA government is actually engaging in some development activities in the much-neglected state of Tamil Nadu.
If the Prime Minister takes time off to open a 350-crore project in Tamil Nadu, the PMANE and the struggling people in and around Koodankulam would like to know why he does not want to come down and open the 18,000-crore Koodankulam Nuclear Power Project (KKNPP). After all, this corrupt and scandalous nuclear power project that has used shoddy and substandard equipment from Russia is a pet and favored project of the nuclear-lover Prime Minister who has signed nuclear deals with a whole array of countries and companies all over the world.
It is only right and appropriate that the Prime Minister inaugurates or at least visits the Koodankulam plant that is considered to be the corner stone of his deadly and radioactive “Brave New Nuclear India” plan. Why can’t he come and reassure the protesting people about the KKNPP’s quality and safety? After all, KKNPP is the largest and longest-built project of his own ministry that will open up more such opportunities for his Masters in Russia, United States, France and so on. Why is he not coming? Why is he chickening out? Is he afraid that he will be held liable and accountable for all the financial improprieties, corruption, scandals and the usage of substandard components at the KKNPP? Is he not sure about the integrity and safety of the Russian plants? Is the project not running hale and hearty as his officials have been claiming? If the KKNPP is a civil nuclear cooperation project, why should there be so much secrecy and opacity about it?
It is not surprising that Prime Minister Manmohan Singh has never respected Indian people’s feelings and sentiments, or views and values as he has never been elected by the people for any post in his entire political life. If he is loyal to the people of India and committed to the safety and well-being of the citizens of this country, this Atomic Energy minister should release the
Site Evaluation Report (SER),
Safety Analysis Report (SAR), and the
Inter-Governmental Agreement (IAG) on Liability signed in 2008 by the Russian and Indian governments.
After all, the Central Information Commissioner (CIC) in New Delhi has already ruled categorically that the Department of Atomic Energy (DAE) should share the SER and SAR with the people of India. And the project-affected people have the legitimate right to know what their government has decided about liability in case something happened at the Koodankulam nuclear project. If Dr. Singh, his corrupt government and the discredited DAE do not want to share these reports with the people of India, it means they are purposely and willfully hiding some extremely important information that has serious ramifications for the safety and security of the people of India, particularly Tamil Nadu.
The Prime Minister and Atomic Energy minister, Dr. Manmohan Singh, must break his deafening and disturbing silence and speak out. If he chooses to ignore our demand as he has been dismissing the Indian citizens’ concerns about all different important issues such as the FDI, GAIL pipeline, Methane project, Neutrino project, and the Sri Lankan genocide in Tamil Eelam, he, his government and his Congress Party will be held responsible for any untoward outcomes at Koodankulam.
So the PMANE joins millions and millions of Tamil people in opposing the discredited Prime Minister’s unloved visit to our State. We observe a Black Day on August 2 here at Idinthakarai.
The Struggle Committee
People’s Movement Against Nuclear Energy
ஆகஸ்ட் 2, 2013
அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு மின் நிலைய பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைக்க வரும் பிரதமர் வருகையை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. தனது அரசு தமிழக மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க அரசின் கடைசி நிமிடத்தில், தேர்தலுக்கு முன்பு நடத்தும் நாடகம்தான் இது.
விசேடமாக நேரம் ஒதுக்கி 350 கோடி ரூபாய் திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும் பிரதமர், பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவிலான கூடங்குளம் அணுமின் திட்டத்தை திறக்கவோ, அல்லது வந்து பார்க்கவோ விரும்பாததன் மர்மம் என்ன என்று கூடங்குளம் பகுதி மக்களும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் வியக்கிறோம். ஊழல் மிகுந்த, தரமற்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இந்த கூடங்குளம் அணுமின் திட்டம், உலக நாடுகள் பலவற்றோடு அணுமின் ஒப்பந்தங்கள் செய்துகொண்ட பிரதமரின் விருப்பத் திட்டம்.
ஆபத்தான, கதிர்வீச்சு மிகுந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க முயலும் பிரதமர் கூடங்குளத்துக்கு வந்து அணுஉலையப் பார்த்து செல்வதுதானே முறை? இந்தத் திட்டம் தரமானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது என்று இங்கே வந்து மக்களிடம் சொல்லி ஆறுதல்படுத்திச் செல்லலாமே? அவருடைய ரஷ்ய, அமெரிக்க, பிரான்சு நாட்டு எஜமானர்களின் திட்டங்கள் நிறைவேற கூடங்குளம் திட்டம் வந்தாக வேண்டும் என்று விரும்பும் பிரதமர் இந்தியாவிலேயே மிகப் பெரிய, நீண்டகாலமாகக் கட்டப்படும் இந்த கூடங்குளம் அணுஉலையை வந்துப் பார்க்க விரும்பாதது ஏன்? அவர் ஏன் வர மறுக்கிறார்? ஏன் பயப்படுகிறார்? கூடங்குளம் திட்டத்தில் நடந்திருக்கும் ஊழல்களுக்கும், மோசடிகளுக்கும், தரமற்ற பொருட்களுக்கும் தான் பொறுப்பேற்க வேண்டிவரும் என்று அஞ்சுகிறாரோ? இது தரமற்ற, பாதுகாப்பற்ற அணுஉலை என்று நினைப்பதுதான் காரணமோ? அவருடைய சகாக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதுபோல, கூடங்குளம் அணுஉலை சரியாக ஓடவில்லையோ? இது ஒரு மக்களுக்கான அணுசக்தித் திட்டம் என்றால், ஏன் இத்தனை இரகசியமும், மூடி மறைப்பும் நடக்கிறது கூடங்குளத்தில்?
அவரது அரசியல் வாழ்வில் எந்தப் பதவிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர், மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவற்றுக்கு மதிப்பளிக்காமல் நடக்கிறார். உண்மையிலேயே இந்திய, தமிழக மக்களுக்கு உண்மையானவராக இவர் இருந்தால், அணுசக்தி அமைச்சர் என்ற முறையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்
தல ஆய்வறிக்கை,
பாதுகாப்பு ஆய்வறிக்கை,
2008-ம் ஆண்டு ரஷ்யாவோடு செய்து கொண்ட இழப்பீடு ஒப்பந்தம்
போன்ற தகவல்களை உடனடியாக மக்களுக்குத் தர வேண்டும்.
தில்லியிலுள்ள மத்திய தகவல் ஆணையம் மேற்கண்ட அறிக்கைகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பு சொல்லியிருக்கிறது. திட்ட பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்கள் இழப்பீடு பற்றி அறிந்துகொள்வதற்கு முழு உரிமை பெற்றவர்கள். ஆனாலும், மன்மோகன் சிங் அரசு இந்தத் தகவல்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையென்றால், மிக மிக முக்கியமான, நாட்டு மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாத தகவல்களை மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு மறைக்கிறது, ஒளித்து வைக்கிறது என்றுதான் பொருள்.
இந்தியப் பிரதமரும், அணுசக்தித் துறை அமைச்சருமான மன்மோகன் சிங் காதை செவிடாக்கும் தனது மவுனத்தைக் கலைத்து உடனடியாகப் பேசவேண்டும். தமிழக மக்களை அச்சுறுத்தும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காவிரிப் பிரச்சினை, கெய்ல் பைப்லைன், மீதேன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஈழத் தமிழர் இனப்படுகொலை போன்றவற்றில், தமிழின விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரு. மன்மோகன் சிங்கும், அவரது அரசும், காங்கிரசு கட்சியும் கூடங்குளம் விபரீதங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும்.
மக்களின் மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகையை கோடிக் கணக்கான தமிழ் மக்களோடு இணைந்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. நாளை (ஆகஸ்ட் 2, 2013) அன்று இடிந்தகரையில் கருப்பு தினம் அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்.
போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் People’s Movemenmt Against Nuclear Energy (PMANE)
இடிந்தகரை 627 104 Idinthakarai 627 104
நெல்லை மாவட்டம் Tirunelveli District
மின்னஞ்சல்/Email: koodankulam@yahoo.com
This article originally appeared on Transcend Media Service (TMS) on 5 Aug 2013.
Anticopyright: Editorials and articles originated on TMS may be freely reprinted, disseminated, translated and used as background material, provided an acknowledgement and link to the source, TMS: The Discredited Prime Minister’s Unloved Visit to Tamil Nadu மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகை, is included. Thank you.
If you enjoyed this article, please donate to TMS to join the growing list of TMS Supporters.
This work is licensed under a CC BY-NC 4.0 License.
Read more
Click here to go to the current weekly digest or pick another article:
KUDANKULAM ANTI-NUCLEAR SATYAGRAHA, INDIA: